மூணாறு ஹனுமான் மலையில் 30,001 தீபங்கள் ஏற்றப்பட்டது
ADDED :1458 days ago
மூணாறு: மூணாறில் காளியம்மன் நவகிரக கிருஷ்ணர் கோயில் சார்பில் அருகில் உள்ள ஹனுமான் மலையில் தீபங்கள் ஏற்றப்பட்டன.
சபரிமலையில் மகரவிளக்கின்போது ஹனுமான் மலையில் தீபங்கள் ஏற்றுவது வழக்கம். அதன்படி 30,001 தீபங்கள் ஏற்றப்பட்டன. அப்போது வான வேடிக்கையும், கோயிலில் அன்னதானமும் நடந்தது. அதற்கான ஏற்பாடுகளை கேரள கோயில் பாதுகாப்பு குழு தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் மனோஜ் ஆகியோர் செய்தனர்.