நன்மைதருவார் ஐயப்பசுவாமி கோயிலில் மகரஜோதி விழா
ADDED :1461 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சக்கம்பட்டி நன்மைதருவார் ஐயப்பசுவாமி கோயிலில் மகரஜோதி விழா நடந்தது. சபரிமலைக்கு நேர் திசையில் அமைந்த இக்கோயிலுக்கு எதிரே 5 கி.மீ., தொலைவில் உள்ள நாழி மலையில் நேற்று முன்தினம் மாலை 6.45 மணிக்கு மகா தீபம் ஏற்றி சரணம் ஐயப்பா கோஷமிட்டு வழிபட்டனர். ஆண்டிபட்டி பகுதியில் உள்ள பல கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தீபத்தை வணங்கினர். கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், சர்வ பூஜை செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் முத்துவன்னியன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.