உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு கோவிலில் பிரதோஷம் வழிப்பாடு

திருநள்ளாறு கோவிலில் பிரதோஷம் வழிப்பாடு

காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் மாட்டுபொங்கல் மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்துவருகிறார். நவரகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது.இதனால் நாட்டின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் திருநள்ளாரில் குவிகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் சனிஸ்வர பகவான் கோவிலில் மாட்டுபொங்கல் மற்றும் சனிபிரதோஷத்தை முன்னிட்டு கொடிமரம் அருகில் உள்ள நந்திகேஸ்வரருக்கு பலவகையான மஞ்சல்,சந்தனம்,பால் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவங்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. பின் மகா தீபாராதனைகள் மற்றும் அன்னதானம் வழக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதின கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !