வீரசோழபுரம் அடஞ்சாரம்மன் கோவிலில் இன்று பொங்கல் விழா
ADDED :1401 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவிலை அடுத்த வீரசோழபுரம் அடஞ்சாரம்மன் கோவிலில் இன்று பௌர்ணமி பூஜை நடைபெறுகிறது. கோவிலில் இன்று மதியம் 12 மணியளவில் தை மாத பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் செல்லவும், அடஞ்சாரம்மன் கோவில் திருப்பணி நடந்து வருகிறது. கோவிலை சேர்ந்தவர்கள் திருப்பணியில் அவர்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என கோவில் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.