ஆற்றல் தரும் காயத்ரி
ADDED :1388 days ago
“உலகின் இருளைப் போக்கி ஆத்ம பலத்தை தரும் ஒளிமயமான சக்தி எதுவோ அதனை நமஸ்கரிப்போமாக” என்று ரிக் வேதம் சூரியனை போற்றுகிறது. காசிப முனிவரின் மகனான சூரியன், வேதங்களில் உள்ள ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாக்கி வான மண்டலத்தில் பவனி வருவதால் ‘சப்தாஸ்தவன்’ என அழைக்கப்படுகிறார். சூரியனின் தேருக்கு கருடனின் சகோதரன் மாதலியே சாரதியாக இருக்கிறார். நவக்கிரகங்களுக்கு தேவையான சக்தியை சூரியனே வழங்குவதாக சூரியசித்தாந்தம் கூறுகிறது. காயத்ரி மந்திரத்தின் மூலம் ஆற்றல் பெற்றே சூரியன் அக்னி சொரூபமாக வானில் திகழ்கிறார்.