கொரோனா கட்டுப்பாட்டில் சிக்குகிறதா மாசித்திருவிழா?
ADDED :1350 days ago
வடமதுரை: கொரோனா தொற்று பிரச்னை ஏற்பட்ட பின்னர் வடமதுரை சவுந்தரராஜப் பெருமாளின் முக்கிய திருவிழாவான ஆடித்தேரோட்டம் கடந்த இரு ஆண்டுகளாக தடைப்பட்டுள்ளது. கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் அனுமதியின்றி எளிமையாக நடந்தது. அதேநேரம் வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கடந்த இரு ஆண்டுகளாக தடையின்றி பூக்குழி இறங்குதல், மாவிளக்கு, தீச்சட்டி எடுத்தல் என வழக்கமான உற்சகத்துடன் நடந்தது.
ஆனால் நடப்பாண்டில் தற்போது தொற்று பிரச்னையால் பள்ளிகள் மூடப்பட்டும், இரவு நேர, ஞாயிறு முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகளுடன் இருப்பதால் மாசித்திருவிழாவுக்கும் சிக்கல் இருப்பதாகவே பக்தர்கள் உணர்கின்றனர். வடமதுரை மாரியம்மன் மாசித்திருவிழாவிற்கு கடந்த இரு ஆண்டுகள் கிடைத்த வாய்ப்பு நடப்பாண்டில் கிடைக்குமா.. கிடைக்காதோ என்பதே மக்களிடம் விவாதப்பொருளாக உள்ளது.