ராமகிருஷ்ண ஆசிரமத்தில் விவேகானந்தர் ஜெயந்தி விழா
ADDED :1446 days ago
சூலூர்: பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. சூலூர் அடுத்த பள்ளபாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் உள்ளது. இங்கு ஆதரவற்ற சிறுவர்கள் பலர் உள்ளனர். இங்கு சுவாமி விவேகானந்தர் அவதரித்த நட்சத்திரத்தின் படி ஜெயந்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் திருவுருவ படம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ அன்னை சாரதா தேவியின் திருவுரு படங்கள், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. சுவாமிஜி சமுதாயத்துக்கு ஆற்றிய பணிகள் நினைவு கூறப்பட்டன. மாணவர்கள் பக்தி பாடல்களை பாடினர். இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.