சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி
ADDED :1612 days ago
சிதம்பரம் : குடியரசு தினத்தையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் கீழ வீதியில் உள்ள நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சன்னதி சித்சபையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு, பொது தீட்சிதர்கள் சார்பில், தேசியக்கொடியை வெள்ளி தாம்பாளத் தட்டில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, தேசியக்கொடி ராஜ கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. பின், ராஜ கோபுரத்தின் உச்சியில் தேசியக்கொடியை ஏற்றி, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கடந்த 1950ம் ஆண்டு முதல், குடியரசு தினம் அன்று கோபுரத்தில் தேசியக்கொடி தொடர்ந்து ஏற்றப்பட்டு வருகிறது.