பாண்டி முனீஸ்வரர் கோயில் விழா
ADDED :1720 days ago
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் கேட்டுகடையில் வெக்காளியம்மன், பாண்டி முனீஸ்வரர் கோயில் ஆண்டு களரி உற்ஸவ விழா மூன்று நாட்கள் நடந்தது.மூன்று கால யாகபூஜையை தொடர்ந்து அம்மன், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.