பாகூர் மூலநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
ADDED :1361 days ago
பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதனையோட்டி, காலை 9.00 மணிக்கு, வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு சனி மகா பிரதோஷ வழிபாடு நடந்தது.கோவில் கொடிமரம் எதிரே, வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள் பாலிக்கும் செல்வநந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.