தை அமாவாசை கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :1447 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மாவூற்று வேலப்பர் கோயிலில் தை அமாவாசை விழா நடந்தது. விழாவில் வேலப்பர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் செய்து வழிபட்டனர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி மேற்கு ஓடை தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகம், மலர் அலங்காரம் செய்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில், ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.