பழநி மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு துவக்கம்
ADDED :1355 days ago
பழநி: பழநி மலைக் கோயிலில் தைப்பூசத் அதற்குப்பின் தங்கரத புறப்பாடு துவங்கப்பட்டது.
பழநி மலைக் கோயிலில் ஜன.11 முதல் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது. பழநி மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு வெளிப்பிராகாரத்தில் 10 நிலைகளில் பக்தர்கள் புறப்பாட்டில் கலந்து கொள்வார்கள். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கரத புறப்பாடில் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். தங்கரத புறப்பாடு ரூ. 2000 செலுத்தி கலந்துகொள்ளலாம். ஒரு தங்கரத புறப்பாடு ரசீதிற்கு மூன்று நபர்கள் அனுமதிக்கப்படுவர். தங்கரத புறப்பாடு கலந்து கொள்ளும் நபர்களுக்கு சுவாமி தரிசனத்திற்கு பின் பிரசாதம் வழங்கப்படும். நேற்று (ஜன.31) தங்கரத புறப்பாடு துவங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.