உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனிராபாத் வியாக்ரபுரி உலிகம்மா

முனிராபாத் வியாக்ரபுரி உலிகம்மா

கர்நாடக மாநிலத்தில் ஹோஸ்பேட்டுக்கு அடுத்ததாக முனிராபாத் அமைந்துள்ளது. துங்கபத்ரா நதி ஓடும் இந்த ஊரில் அருள்பாலிக்கும் காவல் தெய்வம்தான் உலிகம்மா. கன்னடத்தில், உலி என்றால் புலி என்று பொருள். துஷ்டர்களைத் தண்டிக்க அம்பாள் புலிமுகத்தோடு புருஷனாய் அவதாரம் எடுத்து, ராட்சச வதம் செய்தாளாம். தேவி அவதார நோக்கம் ஒன்றுதான் என்றாலும், வேறு வேறு இடங்களில் வேறு வேறு பெயர்களில் அருள்பாலிக்கிறாள். இக்கோயிலுக்கு எல்லா மதத்தினரும் வருவார்கள்.  இங்கு முஸ்லிம்கள், குங்குமத்தைப் பட்டையாய் இட்டுக்கொள்வார்கள். இந்த ஊருக்கு முனிராபாத் என்று பெயர்வரக் காரணம்: கிருஷ்ண தேவராயருக்குப் பின். முனீர் என்ற முஸ்லிம் மன்னன் ஆண்டான். ஆபாத் என்றால் கோட்டை என்று அர்த்தம். அதனால் முனிராபாத் ஆனது. திப்புசுல்தான் கூட அம்பாளுக்கு முத்துமாலை, வைரமாலைகளை காணிக்கையாக அளித்ததாகக் கூறப்படுகிறது. ÷க்ஷத்ரபாலக என்றழைக்கப்படும் காவல் தெய்வம் இந்த உலிகம்மா தேவி. இவள் சுயம்புவாகத் தோன்றியவள். வைகாசி அமாவாசை கழிந்து, பிரதமை முதல் துவாதசி திருவிழா நடைபெறுகிறது. தேவிக்கு அரிசிப் பாயசம் செய்வார்கள். அதைக் கரண்டி கொண்டு கிளராமல் கையாலேயே எடுத்துக்காட்டி நைவேத்தியம் செய்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !