சாத்துார் முருகன் கோயிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :1346 days ago
சாத்துார்: சாத்துார் முருகன் கோவில் கந்த சஷ்டி மண்டபத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
உலக நன்மை வேண்டியும் , ெகாரோனா, ஒமைக்கிரான் நோயிலிருந்து மக்கள் அனைவரும் விடுபட வேண்டி இந்த சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிவபக்தர்கள் பெண்கள் மாணவர்கள் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருவாசகப் பாடல்கள் பாடி பூஜைகள் செய்தனர். ஓதுவார் ராமர் மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார் திரி நேத்திரம் தொண்டு நிறுவன நிர்வாகி வெங்கடேஷ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.