உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நதியின் கரையில் அமைந்துள்ள நஞ்சன்கூடு

நதியின் கரையில் அமைந்துள்ள நஞ்சன்கூடு

கபிலா அல்லது கபினி என்று அழைக்கப்படும் நதியின் கரையில் அமைந்துள்ளது நஞ்சன்கூடு என்ற நகரம்.  மைசூரிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது இது.  தட்சிண காசி என்றும் அழைக்கப்படும் இந்த இடம் ஸ்ரீ கண்டேஸ்வரர் ஆலயத்துக்கு புகழ் பெற்றது.  இதன் அருகில் உள்ள ஹெப்பயா என்ற கிராமத்தில் உள்ளது காந்தாரி ஆலயம்.
இது தொன்மையான கோவில் அல்ல என்பதும் இதற்கான அஸ்திவாரக் கல் 2008ல்தான் நிறுவப்பட்டது என்பதும் விந்தையான செய்திகள். பெஜவர் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஸ்வேஸ்வரர் தீர்த்த சுவாமிகள் அஸ்திவாரக் கல் நடும் விழாவை துவக்கி வைத்தார்.  இரண்டரை கோடி ரூபாய் செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் ஆலயம் இது.  கணவனிடம் கொண்டிருந்த அதீத அன்பு, அதேசமயம் நேர்மையில் இருந்து வழுவாத தன்மை இரண்டினாலும் காந்தாரி வழிபாட்டுக்கு உரியவர் ஆகிறார்.
திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள மேலே தம்பனூர் என்ற இடத்திலும் காந்தாரி அம்மன் ஆலயம் உள்ளது.  இதன் முக்கிய தெய்வம் காந்தாரியம்மன்.  விநாயகர், நாகராஜன், மந்திரமூர்த்தி ஆகியோரின் உருவங்களும் இந்த ஆலய வளாகத்தில் காணப்படுகின்றன.  சித்ரா பவுர்ணமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !