ஆத்திப்பூ சூடிய சிவன்
ADDED :1385 days ago
அவ்வையார் எழுதிய நுால் ஆத்திச்சூடி என்பது நமக்கு தெரியும். ஆனால் இது சிவனுடைய பெயர்களில் ஒன்று. சிவன் தலையில் கங்கை, நாகம், பிறை ஆகியவற்றோடு கொன்றை, ஆத்திப்பூக்களையும் சூடியிருப்பார். ஆத்திப்பூ என்பது இளம் மஞ்சள் நிறத்தில் பிறைச்சந்திரன் போல வளைவாக இருக்கும். இதனை வடமொழியில் ‘அகஸ்தி’ என குறிப்பிடுவர். அதுவே அகத்திப்பூ என்றாகி ஆத்திப்பூ என மாறியது.
ஆத்திச்சூடியில் உள்ள கடவுள்வாழ்த்து பாடல் சிவனை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.