நமசிவாய, சிவாய நம.. எது சரியான முறை?
ADDED :1448 days ago
இரண்டுமே சரி தான். நமசிவாய என்பது எல்லோருக்கும் பொது. சிவாயநம என்பது தீட்சை பெற்று சிவபூஜை செய்பவர்களுக்கு மாத்திரம் உரியது. நமசிவாய என்பது தான் முதன்முதலில் சமயதீட்சை பெறுபவர்களுக்கு உபதேசிக்கப்படுவதாகும். இதை ஜெபித்தாலே, இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் சவுபாக்யங்கள் அனைத்தும் கிட்டிவிடும்.