கதிர்காமம் கோவிலில் நாளை செடல் உற்சவம்
ADDED :1446 days ago
புதுச்சேரி, : கதிர்காமம் முத்து மாரியம்மன் கோவில் நாளை செடல் உற்சவம் நடக்கிறது.இதனை முன்னிட்டு இன்று காலை 7.00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, இரவு 9.00 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது.நாளை காலை 7.00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. பின் சக்தி கரகம் எடுத்து 10.௦௦ மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. மதியம் 2.௦௦ மணிக்கு சாகை வார்த்தல், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.