நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பது ஏன்?
ADDED :4880 days ago
பெண்களின் உச்சிவகிட்டிற்கு ஸீமந்தம் என்று பெயர். திருமணமான பெண்கள் இங்கு அவசியம் குங்குமம் வைக்கவேண்டும். இதற்கு ஸீமந்த திலகம் என்று பெயர். இதனால் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்றுதேவியரும் மகிழ்கிறார்கள். பார்வதி தீர்க்க சுமங்கலிபாக்கியத்தையும், லட்சுமி அழகு, இளமையையும், வம்சவிருத்தியையும், சரஸ்வதி நல்லறிவையும் தருகின்றனர். உச்சிவகிட்டில் இருந்து கீழே செல்லும் நரம்பு கருப்பையைச் சென்றடைகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எட்டாம் மாதத்தில் வளைகாப்பின் போது முள்ளம்பன்றி ரோமத்தால் கீறி விடுவதுண்டு. இந்த ரோமத்துக்கு ஸீமந்தம் என்று பெயர். அபிராமிப்பட்டர் அம்பாள் பற்றி,உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகமும் என்று பாடியுள்ளார்.