கடையம் கோயில்களில் இன்று கொடை விழா
கடையம்: கடையம் முப்புடாதி அம்மன், காளியம்மன் கோயில்களில் இன்று (8ம்தேதி) கொடைவிழா நடக்கிறது. கடையம் வடக்கு ரதவீதியில் முப்புடாதி அம்மன் கோயில் உள்ளது. கீழக்கடையம் ஊரின் மையப்பகுதியில் 18 பட்டி நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த 2 கோயில்களிலும் கொடைவிழா ஒரேநாளில் நடக்கும்.
முப்புடாதி அம்மன்: முப்புடாதி அம்மன் கோயிலில் கடந்த ஜன. 25ம்தேதி பஜார் வியாபாரிகள், மண்டகப்படி நடந்தது, ஜன.31ம் தி முப்புடாதிஅம்பாள் அன்னதான அறக்கட்டளை சார்பில் திருவிழா நடந்தது. அதனை தொடர்ந்து பிப்.1ல் இருந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. 7ம் திருநாள் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை பாபநாசத்தில் இருந்து தீர்த்தம் டுவருதல், பால்குடம், பூந்தட்டு ஊர்வலம், 108 சங்காபிஷேகம், விசேஷபூஜை, சிறப்பு அன்னதானம் நடந்தது. இரவு அலங்கார தீபாராதனை, அதனை தொடர்ந்து அம்பாள் எழுந்தருளல் நடந்தது. இன்று (8ம்தேதி) விழா நடக்கிறது.
பத்ரகாளி அம்மன்: கீழக்கடையம் காளியம்மன் கோயில் விழா கடந்த பிப்.1ம் தேதி துவங்கியது. தினமும் மண்டகப்படி தாரர்களால் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. 7ம் திருநாளான நேற்று காலை தீர்த்தகுடம் எடுத்து வருதல், சுமங்கலி பூஜை, சிறப்பு தீபாராதனை. அன்னதானம் நடந்தது. இன்று விழா நடக்கிறது.