உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசன்னிதானம் பட்டின பிரவேசம்

திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசன்னிதானம் பட்டின பிரவேசம்

திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழா நடந்தது. காலை குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், தோத்திரப்பாடல்கள் பாராயணம் நடந்தது. தொடர்ந்து திருக்கோலக்கா இராமநாத சிவாச்சாரியார் அறக்கட்டளையில் இருந்து திருக்கடையூர் அமிர்த கணேச குருக்கள் சிவாகம கலாநிதி எனும்  விருதும், திருவிசநல்லூர் நாதஸ்வர வித்வான் செல்வத்திற்கு நாதஸ்வர கலாநிதி எனும் விருதும், தவில் வித்வான் திருப்பரங்குன்றம் ரத்தினகிரி பணியை பாராட்டி தவிலிசை கலாநிதி ஆகியோரின் பணிகளைப் பாராட்டி நமச்சிவாய மூர்த்திகள் ஆசிகவசமாக பொன்னாடை போர்த்தி உருத்திராக்க மாலை அணிவித்து தலா பொற்கிழி ரூ. 5 ஆயிரத்தை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார்

சூரியனார்கோயில் ஆதீனம் 28வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள்,  தருமை ஆதீனம் ஸ்ரீமத் மாணிக்கவாசகம் தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், துலாவூர் ஆதீனம் சுந்தரேச சுவாமிகள்,    பேரூர் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களின் ஆதீனம் குருமகாசன்னிதானம் தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் அருணாச்சல தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாகேஸ்வர பூஜை நடந்தது.

மாலை  ஆதீன குருமகா சந்நதானங்களின் குருமூர்த்தம் உள்ள மறைஞான  தேசிகர் தபோவனத்தில் ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் வழிபாடு செய்தார்.    திருவையாறு அரசு இசைக் கல்லூரி பேராசிரியர் சுவாமிநாதன் குழுவினரின் இன்னிசை கச்சேரி, இரவு திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்  வழிபாடு செய்தார். தொடர்ந்து பட்டணப் பிரவேசம் மற்றும் சிவஞான கொலுகாட்சி நடந்தது. முன்னதாக திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் பட்டிணப்பிரவேசம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து   போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சில அவற்றில் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர் தொடர்ந்து போலீசார் அதனை காரணம் காட்டி பல்லக்கில் அமர்ந்த குரு மஹா சந்நிதானத்தை  பட்டிணப்பிரவேசம் மேற்கொள்ள வேண்டாம் என தடுக்க முயன்றனர் ஆனால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்ததை அடுத்து போலீசார் பின்வாங்கினர். தொடர்ந்து சன்னிதானத்தில் பட்டின பிரவேசம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !