நல்ல காலம் வந்தாச்சு...
நம்பிக்கையூட்டுகிறார் சாரதாதேவியார்
........
* நீ கடவுளை வணங்க ஆரம்பித்துவிட்டாலே உனக்கு நல்ல காலம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
* மன அமைதி வேண்டுமா.. பிறரது குற்றத்தை பார்க்காதே.
* இளமையிலேயே கடவுளைத் தேடுபவன் பேறு பெற்றவன்.
* தாயிற்கு உதவி செய். அதுவே தர்மத்தில் மேலானது.
* பிறரது கெட்ட குணத்தை பற்றி பேசாதே. மீறி பேசினால் அந்த குணம் உனக்கும் வந்துவிடும்.
* கடவுள் உன்னை எப்படி வைத்தாலும் அதை திருப்தியுடன் ஏற்றுக்கொள்.
* கடவுளின் திருநாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லு.
* நீ செய்த நல்லது, கெட்டதை அனுபவித்தே ஆக வேண்டும்.
* கடவுளின் நாமத்தை சொல்லியபடியே துன்பத்தை சகித்துக்கொள்.
* நன்றாக சாப்பிடு. சாப்பிட என்றுமே கூச்சப்படக்கூடாது.
* சுறுசுறுப்புடன் செயல்படு. பெரிய விஷயத்தைக்கூட எளிதாக முடிக்கலாம்.
* நாணமே பெண்களுடைய உண்மையான ஆபரணம்.
* குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உரிய மரியாதையைக்கொடு.
* பிறரை சுதந்திரமாக வேலை செய்யவிடு. தவறுகள் குறைய ஆரம்பிக்கும்.
* நீ சாப்பிடும் உணவை பொறுத்தே உனது இயல்பு அமைகிறது.