சந்ததி நலம் பெற...
ADDED :1440 days ago
திருமணமானவுடன் நாம் குழந்தைக்காக ஏங்குவோம். அவர்கள் பிறந்ததும் உயிர்போல் காப்போம். நம் ஆசைகள் எல்லாம் அவர்களையே சுற்றி வரும். அந்த சமயத்தில் நம்மையும் இப்படித்தானே தாய், தந்தை வளர்த்திருப்பார்கள் என்று பலரும் நினைப்பதில்லை. மனைவி, குழந்தைகள் என்று வந்ததும் அவர்களே உலகம் என்று பெற்றோரை மறந்துவிடுகிறோம். பெற்றோர்களால் இனி நமக்கு என்ன பயன் என கருதுவதே இதற்கு காரணம். இது பெரும் பாவமாகும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக உழைப்பதில் தவறு சொல்லவில்லை. எதிர்காலத்தில் குழந்தைகள் நம்மை அலட்சியம் செய்தால் நம் நிலை என்ன... எனவே பெற்றோரை மன, பொருளாதார ரீதியாக பாதிக்காதாவாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்களது சந்ததியே நலம் பெறும்.