எமதர்மனும் மாசிமகமும்
ADDED :1376 days ago
ஒருமுறை பிரளயம் வந்த போது எமதர்மனை அழைத்தார் சிவபெருமான். உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளின் உயிர்களையும் பறித்து விட்டு, எமதர்மனும் இறக்க வேண்டும் என கட்டளையிட்டார். அதன்படி உலகமே பிரளய வெள்ளத்தால் சூழப்பட்டு அழிந்தது. எல்லா உயிர்களையும் அழித்த எமதர்மன் தானும் இறந்தான். பின் புதிய உலகத்தை படைத்த போது சமதர்மத்தின் அதிபதியான எமதர்மன் மீண்டும் பிறந்தான். அந்த நாளே மாசிமகம்.