ருத்ர லிங்கேஸ்வரர் கோவிலில் திருவாதிரை பூஜை
ADDED :1670 days ago
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே உள்ள கோ.அய்யாபட்டி சிவதாண்டவ பாறை- ருத்ர லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று பிப்,12 தை மாத திருவாதிரையை முன்னிட்டு சிறப்பு யாக வேள்வி நடத்தப்பட்டது. தொடர்ந்து ருத்ராக்ஷேஸ்வரர் இருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.