அருணாசலேஸ்வரர் கோவிலில் மாசி சோமாவார பிரதோஷ பூஜை
ADDED :1374 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மாசி மாத வளர்பிறை சோமாவார பிரதோஷ பூஜை நடந்தது. இதை முன்னிட்டு, கோவிலில் உள்ள சிறிய நந்தி, அதிகார நந்தி மற்றும் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தி ஆகியவற்றுக்கு மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷம் எழுப்பி வழிபட்டனர். பின்னர் உற்சவ மூர்த்தி, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.