தீர்த்தவாரிக்கு எழுந்தருளிய சுவாமிகளுக்கு வரவேற்பு
ADDED :1368 days ago
புதுச்சேரி : மாசிமக தீர்த்தவாரிக்கு எழுந்தருளிய சுவாமிகளுக்கு, பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வைத்திக்குப்பத்தில் மாசிமக தீர்த்தவாரி விழா இன்று 16ம் தேதி நடக்கிறது. தீர்த்தவாரியில் பங்கேற்பதற்காக வருகை தந்த செஞ்சி ரங்கநாதர், மயிலம் சுப்ரமணிய சுவாமி, மேல்மலையனுார் அங்காளம்மன் ஆகிய சுவாமிகள் நேற்று புதுச்சேரிக்கு எழுந்தருளினர். சுவாமிகளுக்கு, சாரம் மாசி மகம் வரவேற்பு குழு சார்பில் நேற்று இரவு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.வரும் 19ம் தேதி தீர்த்தவாரி முடிந்து திரும்பும் தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு, கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடக்கிறது.