உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோவிலில் கொடியோற்றம்

திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோவிலில் கொடியோற்றம்

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோவிலில் நேற்று பிரம்மோத்ஸ்வ விழாவை முன்னிட்டு கொடியோற்றத்துடன் துவக்கியது.

காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வர் கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஸ்ரீநளபுரநாயகி ஸமேத ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸ்வ விழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி வாஸ்து சாந்தியுடன் துவக்கியது. நேற்று விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றத்துடன் துவக்கியது.இதில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீநளநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலை சூரிய பிரபையில் வேணுகோபாலராக பெருமாள் வீதியுலா நடந்தது.வரும் 27ம் தேதி கருடசேவை வாகனத்தில் வீதியுலா,28ம் தேதி திருத்தேர்,நளதீர்த்தத்தில் தீர்த்தவாரி மாலை திருக்கல்யாணம் உத்ஸ்வம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !