உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை கோயில்களில் சிவராத்திரி பூஜை

தேவகோட்டை கோயில்களில் சிவராத்திரி பூஜை

தேவகோட்டை: தேவகோட்டையில் சிவராத்திரியை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மும்முடி நாதர் கோயில், கைலாசநாதர் கோயில் , சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில், கலங்காது கண்ட விநாயகர் கோவில், ஆதிசங்கரர் கோவில் உட்பட அனைத்து கோயில்களிலும் இரவு 4 கால பூஜை நடந்தது.

தாழையூர் கூத்தாடி முத்து பெரிய நாயகி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு நான்குகால பூஜையும் அதனை தொடர்ந்து நேற்று காவடி ஆட்டம் பால்குடம் நடந்தது பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் இறகுசேரி கோயிலில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோயிலில் சுவாமி அம்பாளுக்கு நான்கு கால பூஜைகள் நடந்தன. மூன்றாம் காலத்தில் நந்தி கருப்பருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன. நேற்று பல கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !