உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யா வைகுண்டர் அவதார தின பேரணி

அய்யா வைகுண்டர் அவதார தின பேரணி

 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 190வது அவதார தினத்தையொட்டி, சுவாமி தோப்புக்கு பக்தர்கள் பேரணி சென்றனர்.அய்யா வைகுண்டரின் தலைமை பதி சுவாமிதோப்பில் அமைந்து உள்ளது.

அவரது அவதார தின விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக திருச்செந்துார், திருவனந்தபுரம் மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவிக் கொடி ஏந்தி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். இங்கு சமய மாநாடு நடந்தது. அதிகாலை இங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பேரணி புறப்பட்டது. கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், பொத்தையடி வழியாக சுவாமி தோப்பில் பவனி வந்தடைந்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !