உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் நாளை பங்குனி திருவிழா கொடியேற்றம்

திருப்பரங்குன்றத்தில் நாளை பங்குனி திருவிழா கொடியேற்றம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நாளை நடக்கிறது. இன்று (மார்ச் 7) மாலையில் மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர், பல்லக்கில் அஸ்தரதேவர் சரவண பொய்கை புறப்பாடாவர்‌ அங்கு பூஜைகள் முடிந்து பிடிமண் எடுத்து வரப்பட்டு கோயிலுக்குள் யாகசாலை நடைபெறும் இடத்தில் வைத்து பாலிகளை பூஜை முடிந்து அனுக்ஞை விநாயகர் முன்பு அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !