திருப்பரங்குன்றம் கோயிலில் மாசி உற்சவ விழா நிறைவு
ADDED :1685 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் மாசி உற்சவ விழா நிறைவடைந்தது. பிப்.28ல் துவங்கிய விழாவில் தினம் மூலவர்கள் அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமி மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. பிப் 27ல் கப்பரை பூஜை, மார்ச் 1ல் மஹாசிவராத்திரி, மார்ச் 5ல் பாரிவேட்டை விழா நடந்தது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று மூலவருக்கு சிறப்பு பூஜை முடிந்து அலங்காரமானது. கோயில் பூசாரிகள் பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.