உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புலிவனம் அம்மன் கோவிலில் மாசி உற்சவம் கோலாகலம்

திருப்புலிவனம் அம்மன் கோவிலில் மாசி உற்சவம் கோலாகலம்

உத்திரமேரூர்: திருப்புலிவனம், அங்காளம்மன் கோவிலில், மாசிமக உற்சவ விழா கோலாகலமாக நடந்தது.உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவம் அங்காளம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் உற்சவ விழா நடப்பது வழக்கம்.அதன்படி, நான்காம் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. காலையில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையை தொடர்ந்து, மாலையில் தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன.இரவில், மலர் அலங்காரத்திலும், சிம்ம வாகனத்திலும் எழுந்தருளிய அம்மன், அப்பகுதி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். அப்போது, அம்மனுக்கு வீடுதோறும் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !