மாமல்லபுரத்தில் இன்று இலவச அனுமதி
ADDED :1350 days ago
மாமல்லபுரம் : சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், பல்லவர் கால நினைவுச் சின்ன சிற்பங்கள் உள்ளன.இங்குள்ள, கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு மற்றும் குடவரைகள் ஆகியவற்றை, தொல்லியல் துறை குழு சின்னங்களாக வகைப்படுத்தியுள்ளது. இவற்றை காண, சுற்றுலாப் பயணியரிடம், நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, உலகப் புகழ்பெற்ற சுற்றுலாதலமான மாமல்லையில், அனைத்து பயணியரும், நுழைவுக் கட்டணம் இன்றி இலவசமாக அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.