பணி உயர்வு கிட்டும்!
ADDED :1389 days ago
சேலம், அயோத்தியாப்பட்டணத்தில், பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர் காட்சியளிக்கிறார். அயோத்தியில் பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, விபீஷணனுக்காக இங்கு பட்டாபிஷேக காட்சி தந்தார் என்கிறார்கள். கருவறையில் ராமர், சீதை லட்சுமணன், ஆஞ்சநேயர், சத்ருக்கனன், சுக்ரீவன், விபீஷணர் ஆகியோரும் உள்ளனர். தலைமைப்பொறுப்பு, பணி உயர்வு ஆகியவற்றுக்காக முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் இங்கு வந்து ராமனை வழிபட, காரியம் கைகூடும் என்பது ஐதிகம்.