உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் தெப்பதிருவிழா

காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் தெப்பதிருவிழா

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ தெப்பதிருவிழா நடந்தது.

காரைக்கால் சுந்தராம்பிகை உடனமர் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதைத்தொடர்ந்து கடந்த 10 மற்றும் 11ம் தேதி பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. 12ம் தேதி அஷ்டதிக் பலி பூஜையுடன் கைலாசநாதர் யானை வாகனத்திலும்,13ம் தேதி வெள்ளி ரிஷபவாகனத்தில் வீதி உலா நடந்தது.15ம் தேதி திருக்கல்யாணம்,17ம் தேதி தேர் திருவிழா நடந்தது. நேற்று இரவு தெப்பதிருவிழா முன்னிட்டு கயிலாசநாதர் மடவிளாகம் வலம் வந்து சுந்தராம்பாள் சமேதராக கைலாசநாதர் தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,நாஜிம், சீனியர் எஸ்.பி.,நாரா சைதன்யா,மாவட்ட எஸ்.பி. சுப்ரமணியன், அறங்காவலர் குழுவினர் தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ரஞ்சன் உள்ளிட்ட ஏராளமான பலர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !