உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் பல்லக்கில் பெருமாள் பட்டிணப்பிரவேசம்

பரமக்குடியில் பல்லக்கில் பெருமாள் பட்டிணப்பிரவேசம்

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழாவையொட்டி, பூப்பல்லக்கில் பெருமாள் பட்டணப் பிரவேசம் நடந்தது.இக்கோயிலில் மார்ச் 18 அன்று காலை 10:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து இரண்டு நாட்கள் பெருமாள் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு மாற்று திருக்கோலம், நேற்று காலை திருமஞ்சனம் நடந்தது. மேலும் இரவு 8:00 மணிக்கு பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பட்டணப் பிரவேசம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !