காஞ்சி மகா பெரியவருக்கு சங்காபிஷேகம்
ADDED :1449 days ago
தேவகோட்டை: தேவகோட்டை திருகயிலேஸ்வரர் கோயிலில் உள்ள காஞ்சி மகா பெரியவாள் சந்திர சேகரேந்திரருக்கு அனுஷம் ஜனன நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக நவநீதகிரி குருக்கள், ரமேஷ் குருக்கள் சிறப்பு நடத்தினர். காஞ்சி பெரியவர் மூலவருக்கும் , உற்சவருக்கும் சங்காபிஷேகம், கலசாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் பங்கேற்றனர். இப்பகுதியில் அருகில் உள்ள கைலாசநாதர் கோயிலில் 1960 ஆம் ஆண்டு காஞ்சி மகா பெரியவாள் ஒரு மாதம் தங்கி மவுன விரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.