உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்

ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்

திருப்பூர் : கரட்டாங்காடு, சித்திவிநாயகர், மாகாளியம்மன் கோவில், பொங்கல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

பூச்சாட்டு, பொரி மாற்றும் நிகழ்ச்சி, 15 ம் தேதி இரவு நடந்தது. பொட்டுசாமி பொங்கல், 21 ம் தேதியும், கணபதிவழிபாடு, 22 ம் தேதியும் நடந்தது. கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து வாணவேடிக்கை, மேள, தாளங்கள் முழங்க, கும்பம் எடுத்துவரப்பட்டது.படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல், சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தன. நேற்று காலை, மாவிளக்கு ஊர்வலமும், பொங்கல் விழாவும் நடந்தது. மாகாளியம்மனுக்கு, சிறப்பு அலங்காரபூஜைகள் நடந்தன.இன்று காலை சிறப்பு அபிேஷகம் மற்றும் மஞ்சள் நீர் பூஜையும், மாலையில், சுவாமி திருவீதியுலாவும் நடக்கிறது. வரும், 25 ம் தேதி பொங்கல் விழா அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !