உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்காளியம்மன் கோவில் விழா: தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் வழிபாடு

பொன்காளியம்மன் கோவில் விழா: தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் வழிபாடு

மொடக்குறிச்சி: சிவகிரியில் பொன்காளியம்மன் கோவில் தேர்திருவிழாவை ஒட்டி, நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில், பழமையான பொன் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் பொங்கல் வைபவம் நடக்கிறது. நடப்பாண்டு பொங்கல் விழா,  கடந்த, 15ம் தேதி தொடங்கியது. கடந்த, 20ம் தேதி வேலாயுதசுவாமி கோவிலில் இருந்து,  பொன்காளியம்மன் கோவிலுக்கு அம்மன் அழைப்பு நடந்தது. நேற்று முன்தினம் பொங்கல் வைபவம், தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.  இதை தொடர்ந்து நள்ளிரவில் குதிரை துள்ளல் நிகழ்ச்சி நடந்தது. குதிரை துளுக்கியத்தை தொடர்ந்து, அம்மன் திருவீதி உலா நடந்தது. அப்போது கோவிலை சுற்றியுள்ள நான்கு சாலைகளிலும், ஆயிரக்கணக்கான  பக்தர்கள் தீப்பந்தம் பிடித்து வழிபட்டனர். ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முன்னதாக கோவில் வளாகத்தில், பொங்கல் விழாவையொட்டி, 250 பெண்கள், ஆண்கள் பங்கேற்ற, கும்மியாட்டம் வெகு விமரிசையாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !