கோவில்களின் நுழைவாயிலில் ஒளிக்காட்சி
ADDED :1297 days ago
சென்னை: கோவில்களின் தல வரலாறு, சிறப்பம்சங்கள், கட்டடக்கலை சிறப்புகள், முக்கிய விழாக்கள் உள்ளிட்ட விபரங்களை, நுழைவாயிலில் ஒளிக்காட்சியாக விளக்க, அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மைத் திட்டத்தில், கோவில்களின் அனைத்து விபரங்களும் தொழில்நுட்பத்தின் உதவியுடன், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதன் ஒரு அங்கமாக, கோவில்களின் தல வரலாறு, கட்டடக்கலை சிறப்புகள், முக்கிய திருவிழா விபரங்களை, பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அந்தந்த கோவில் நுழைவாயில்களில் ஒளிக்காட்சி வாயிலாக விளக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில், கோவில் அமைவிட வரைபடம், இணையதளம், தொலைபேசி எண்கள், பயண வழித்தடங்கள், பூஜை விபரம், நாள், தேதி, நட்சத்திரம் உள்ளிட்ட தகவல்களும், தமிழ், ஆங்கிலத்தில் இடம்பெறும் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.