திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் பெருமானுக்கு திருகைலாய காட்சி வைபவம்!
ADDED :4941 days ago
தஞ்சாவூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அப்பர் பெருமானுக்கு திருகைலாய காட்சியருலும் வைபவம் நடந்தது. அப்போது தர்மசம்வர்த்தினி சமோத ஐயாறப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். கோவிலில் திருகைலாய காட்சியை காண பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.