தங்கமழை பொழிகிறது!
ADDED :1452 days ago
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வ வளத்துடன் வாழ்ந்தனர். அவனை வெளியேற்றிய ராவணன், இலங்கையின் மன்னன் ஆனான். குபேரனிடம் புஷ்பக விமானம் இருந்தது. அது செல்லும் இடமெல்லாம் தங்கத்தையும், நவமணியையும் கொட்டிக் கொண்டே செல்லும் சக்தி படைத்தது. அந்த விமானத்தை ராவணன் பறித்துக் கொண்டான். இந்த விமானத்தில் தான், சீதையை அவன் இலங்கைக்கு கடத்தியதாக ராமாயணம் கூறுகிறது.