அமர்நாத் பனிலிங்கம் புனித யாத்ரா
ADDED :4933 days ago
குன்னூர்:குன்னூர் ஹரி ஓம் அமர்நாத் பனிலிங்கம் யாத்ரா சேவா சங்கம் சார்பில், 12ம் ஆண்டு புனித யாத்திரை மற்றும் அன்னதான விழா 20ம் தேதி நடக்கிறது. குன்னூர் வி.பி., தெரு சிவசுப்ரமணியர் கோவிலில் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை. மதியம் ஒரு மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாவட்ட யாத்திரை ஆலோசகர் பாலகிருஷ்ணன் அன்னதானத்தை துவக்கி வைக்கிறார். இரவு 7 மணிக்கு சிவனடியார்கள் புனித யாத்திரை புறப்படுகின்றனர்.