சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா
ADDED :1315 days ago
சிவகாசி : சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது.ஏப். 4 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். நேற்று கோயிலில் பொங்கல் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7:30 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று கயர் குத்து திருவிழாவும், நாளை தேரோட்டமும் நடக்கிறது.