உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் திருவிழா ஊஞ்சல் உற்சவம்

மாரியம்மன் திருவிழா ஊஞ்சல் உற்சவம்

அன்னூர்: அன்னூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

அன்னூர் மாரியம்மன் கோவில் 32வது ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த 5ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 12ம் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் நடந்தது. நேற்றுமுன்தினம் காலை அபிஷேக ஆராதனையும், மதியம் அன்னதானம் வழங்குதலும் கம்மவார் சமூகம் சார்பில் நடந்தது. நேற்று கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூகம் சார்பில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர், இன்று மாலை திருவிளக்கு பூஜையும், இரவு சிறுவர், சிறுமியரின் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !