அய்யப்பன் கோயிலில் சித்திரை விஷு கனி தரிசனம்
ADDED :1366 days ago
வாடிப்பட்டி: நாகமலை புதுக்கோட்டை ஆனந்த அய்யப்பன் கோயிலில் நேற்று சித்திரை வருடப்பிறப்பு (சுபகிருது) விஷு கனி தரிசனம் மற்றும் குருபெயர்ச்சி யாகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பரிகார ராசிக்காரர்களுக்கு தோஷ நிவர்த்தி யாகம் தட்சிணாமூர்த்தி குரு பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட திரவ அபிஷேக ஆராதனையும், சுவாமிக்கு கனி பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.