/
கோயில்கள் செய்திகள் / யோக நரசிங்க பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி : திரளாக பக்தர்கள் பங்கேற்பு
யோக நரசிங்க பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி : திரளாக பக்தர்கள் பங்கேற்பு
ADDED :1296 days ago
உத்தமபாளையம்: உத்தமபாளையம் யோகநரசிங்க பெருமாள், கள்ளழகராக முல்லைப்பெரியாற்றில் நேற்று காலை இறங்கினார். திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
உத்தமபாளையம் யோகநரசிங்க பெருமாள் கோயிலிலிருந்து நேற்று காலை 7, 45 மணிக்கு குதிரைவாகத்தில், ராஜ அலங்காரத்தில் வீதி உலா வந்து, காலை 8.30 மணிக்கு முல்லைப்பெரியாற்றில் கள்ளழகராக இறங்கினார். அங்கு திரண்டிருந்த பக்தர்களுக்கு நாட்டு சர்க்கரை வழங்கப்பட்டது. பின்னர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளிலும் பக்தர்கள் பங்கேற்றனர். புளியோதரை, பொங்கல் பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய பிரமுகர்களும், ஒம் நமோ நாராயணா பக்த சபையினரும் கலந்து கொண்டனர்.