மருதாநதியில் இறங்கிய அழகர்
ADDED :1308 days ago
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் மருதாநதியில் வரதராஜப்பெருமாள் அழகர் வேடத்தில் குதிரை வாகனத்தில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சித்தரேவு வரதராஜப்பெருமாள் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் இருந்து கோயிலில் இருந்து ஆற்றில் இறங்குவதற்கு கிளம்பினார். கதிர் நாயக்கன்பட்டி, நெல்லூர் வழியாக அய்யம்பாளையம் மருதாநதியில் இறங்கினார். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு வரவேற்றனர். பின் அய்யம்பாளையம் வீதிகளில் உலா வந்து இன்றும் அய்யம்பாளையத்தில் தங்கி இரவு சித்தரேவு வரதராஜ பெருமாள் கோவிலை சென்றடைகிறார்.