உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கருடசேவை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கருடசேவை

சென்னை : சென்னை, திருவவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று கருடசேவை நடந்தது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், இந்த ஆண்டிற்கான சித்திரை மாத பிரம்மோற்சவம், 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் மூன்றாம் நாளான இன்று கருடசேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  20ம்தேதி நாச்சியார் கோலத்தில்பல்லக்கு சேவை நடக்கிறது.விழாவின் முக்கிய நாளான, 22ம் தேதி தேர் திருவிழாவும், 23ம் தேதி வெண்ணெய் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை நடக்கிறது.24ம் தேதி காலை, 11:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும் , இரவு 7:30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. 25ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா பூர்த்தியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !